top of page

பத்ரிஜி அவர்களுடன் உரையாடல் பாகம் 2


Conversation with Padriji


நீங்கள் உங்கள் ஞான வாழ்க்கையை எப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள்?

 

 நிகழும்பொழுது அறியாமல் நடந்து , நடப்பவை நடந்து முடிந்த பின்பு இவை ஏன் நடந்தது என்று எனக்கு புரிந்தது.


சைவ உலகம் கருணை உலகம் அகிம்சை உலகம் தியான உலகம் இவற்றை உருவாக்குவதே என் பணி.


அதற்கான பயிற்சியை நான் கொரமெண்டல் கம்பெனியில் 10 வருடம் வேலை செய்த பொழுது பெற்றேன். எனக்கு அங்கு ஆபீஸ் வேலை அல்ல அங்கு மார்க்கெட்டிங் வேலை .

ஊர் ஊராக அலைந்தேன் .அதுவே எனக்கு இப்பொழுது மிக பயனுள்ளதாக இருக்கிறது. தியானம் செய்ய மட்டுமே நான் பிறந்திருந்தால் இமாலயத்திற்கு அருகில் பிறந்திருப்பேன்

தியான பிரச்சாரத்திற்காகவே பிறந்ததால் கம்பெனி எனக்கு பணமும் கொடுத்து பயிற்சியும் கொடுத்தது. இதற்கு என் தாய் தந்தை மற்றும் என் கம்பெனிக்குு நன்றி .

தினமும் 20 ஊர்களில் கூட சுற்றி திரிந்துள்ளேன். அதுவே எனக்கு இப்பொழுது சுற்றும் பயிற்சியை அளித்துள்ளது. நம் வாழ்க்கைக்கு நாமே சிருஷ்டி கருத்தா பின் பிறக்கும் பொழுது ஸ்திதி கருத்தா விட்டு விலககிய பின்னர் லய கருத்தா நாடக மேடையை விட்டு விலகிய பின் யார் நமக்கு சொந்தம் .

 

ஒரு முறை அபிமன்யு மரணத்திற்காக அர்சுனர் அழுதார். அர்ஜுனனை வேதவியாசர் தன்   தவ வலிமையால் மேல் உலகில் தன் மகனை சந்திக்க அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அபிமன்யு யார் நீ என்றார். இங்கு நாடகம் முடிந்தவுடன் அதன் தொடர்பு நமக்கு இல்லை.

 

உங்கள் புல்லாங்குழலின் சங்கீதம் தியானத்திற்கு கிடைத்த பலம் அது எவ்வாறு உங்களுக்கு அமைந்தது?

 

 என் தந்தைக்கு சங்கீதத்தின் மீது அக்கறையில்லை . சங்கீதம் சம்பாதிக்குமா என்பார் .என் தாய் சங்கீத ரசனை உள்ளவர் அவரிடமிருந்து அந்த கலை எனக்கு கிடைத்தது.

அதற்காக அல்லவா நான் என் தாயாரை என் அன்னையாக தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் .

 

சங்கீதம் பயிலும் போது அ்றியவில்லை என்றாலும்,  இப்பொழுது ஆத்ம தியான பிரச்சார வாழ்க்கைக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன்.

 

கிருஷ்ணர் ஓஷோ மற்றும் சூஃபி மாஸ்டர்களும் கூட இப்புல்லாங்குழலை வாசிக்கின்றனரே ஏன்?

 

ஏனப்பா வீணை போன்ற பிற வாத்தியங்களை தூக்கிக் கொண்டே அலைய முடியுமா ?இது கனமில்லாதது என் கைடுக்கில் வைத்துக் கொண்டு கூட நான் 

நடப்பேன். தூக்கிச் செல்ல மிக எளிதானது.

 

ஒருவேளை இது மனம் மயக்குவதாலா?

 

எல்லா வாத்தியங்களும் மனதை மயக்குவது தான் .அதன் பயிற்சியே அதன் இனிய இசைக்கு காரணம் .

 

ஒரு பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் பூஜைகள் வேண்டாம் என்று கூறுவது எங்கனம் ?

 

சுவாமி தயானந்த சரஸ்வதி மிகப்பெரிய வேத பண்டிதர். அவரே ஊர் ஊராக சென்று பூஜை செய்வதால் பலன் இல்லை என்றே 

கூறினார்.

 

0 views0 comments

تعليقات


Message for Guided meditation for anxiety
bottom of page