இந்த உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் வாழ்க்கை என்பது இருக்கிறது.
ஒவ்வொரு உயிரினங்களின் வாழ்க்கையும் வெவ்வேறு விதமானது.
வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷம், துக்கம், கவலை இவை அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதற்கான காரணம் நாம் செய்யும் செயல்கள் மட்டுமே.
நாம் செய்யும் செயல்களை வைத்தே நாம் வாழும் வாழ்க்கை அமைகிறது.
மிருகங்கள் செய்யும் தவறுகளை மிருகங்களால் உணர்ந்து கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் முடியாது ஆனால் மனிதனின் வாழ்க்கையில் அவர்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் முடியும்.
நம் கர்மாக்களுக்கு ஒரு தீர்வு...
நம் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை.....
நம் மனதிற்கு ஒரு அமைதி...
இதற்கு ஒரே தீர்வு தியானம் மட்டுமே.
சிலர் தியானத்தை கடவுளுடன் பேசுவதாக ஒப்பிடுவார்கள். ஆனால் அறிவியலின்படி ஆராயும்பொழுது தியானம் என்பது மனதை அமைதிப்படுத்தி ஒருநிலைப்படுத்த செய்வதே ஆகும்.
மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை இருந்தால் தியானம் செய்வதின் மூலம் குறையும். எனவே தியானம் செய்து வாழ்க்கையில் நற்பலன்களை பெறுங்கள்.
உங்கள் மனதில் எழும் குழப்பத்திற்கும், சந்தேகத்திற்கும் உங்கள் கேள்விகளுக்கும் பிரமிட் மூத்த ஆசான்கள் கூறும் பதில்கள்.
பத்ரிஜி அவர்களின் வழி காட்டுதலால் நம் வாழ்க்கையில் வரும் அணைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, முன்னேறி செல்ல, நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் பிரம்மரிஷி பிதாமஹர் பத்ரிஜி அவர்கள்.
தியானத்தை உங்களுக்கு கற்பித்து உங்கள் வாழ்க்கையும் தியான வாழ்க்கையாக மாற்றுவதற்கு 30 நாட்கள் தியானத்தில் அமருங்கள்.
To visit our website : www.pmctamizhtv.com
Comments