தியானம் என்பது கண்களை மூடி ஒரு இடத்தில் அமைதியாக அமர்வது. தியானம் செய்யும் பொழுது நம் கவனம் மூச்சுக்காற்றை தவிர வேறு எதிலும் இருக்கக் கூடாது. தியானத்தின் மூலம் நம் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முடியும். தியானம் செய்வதன் மூலம் நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் செலுத்த முடியும்.
தியானத்தில் பல வகைகள் உள்ளன. நமக்கு உகந்த முறையை தேர்ந்தெடுத்து தியானம் செய்ய வேண்டும். (சிலர் மந்திரங்களைக் கூறி தியானம் செய்வார்கள்.)
தியானம் நம் வாழ்வில் இருக்கும் வரை நாம் உடல் நலத்துடனும், மனநலத்துடன் இருப்போம்.
நம் வாழ்வில் எந்த ஒரு செயற்கையான வைத்தியமும் தேவைப்படாது.
இதுவரையில் தியானத்தைப் பற்றி தெரியாதவர்கள் கூட மிக சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
நாம் தியானம் செய்வது மட்டுமன்றி நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே தியானத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக அவர்களை வற்புறுத்த வேண்டும் என்று அவசியமில்லை. நாம் தியானம் செய்யும் பொழுது அவர்களை நம் அருகில் அமர வைத்துக் கொண்டாலே அவர்கள் நம்மை பார்த்து தியானம் செய்ய தொடங்கி விடுவார்கள்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்ற பழமொழிக்கேற்ப குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே தியானத்தை சொல்லிக் கொடுத்தால் அவர்கள் தன் வாழ்வின் இறுதி வரையில் அதனை பின்பற்றுவார்கள். மேலும் உடல் நலத்துடன் இருப்பார்கள்.
இந்த நேருக்கு நேர் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தியானத்தை பற்றிய உங்களின் சந்தேகங்களை பிரம்மரிஷி பத்ரிஜி அவர்களிடம் நேரடியாக கேட்டு பதிலை உடனடியாக பெறலாம்.
தொடர்புக்கொள்ள : https://www.pmctamizhtv.com/
நாமும் தியானத்தை கற்று மற்றவர்களுக்கும் கற்பிப்போம்.
Comments